சொத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டல்

கோவையில் சொத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டல் விடுத்த உறவினர்கள் மீது வயதான தம்பதி புகார் அளித்துள்ளனர்.
கோயம்புத்தூர்
கோவை
சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த வயதான தம்பதி ரங்கசாமி (வயது 87), ராமாத்தாள் (80) ஆகியோர் மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எங்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் இருவருக்கும் சொத்துகளை பிரித்து கொடுத்து விட்டோம். இந்த நிலையில் எங்களது பெயரில் கண்ணம்பாளையத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தங்களது பெயருக்கு மாற்றித்தரும்படி உறவினர் ஒருவரும், அவரது மகனும் எங்களை அடித்தும், மிரட்டியும் வருகின்றனர். இதுகுறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். இதையடுத்து சில நாட்கள் அமைதியாக இருந்த அவர்கள் தற்போது மீண்டும் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story






