ஏற்காட்டில் புதிய படகு அறிமுகம்சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ஏற்காட்டில் புதிய படகு அறிமுகம்சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
சேலம்

ஏற்காடு

ஏற்காட்டில் புதிய படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படகு இல்லம்

ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வகையான படகுகள் உள்ளன.

அதில் குறிப்பாக 5 துடுப்பு படகு, தாங்களே இயக்கக்கூடிய 30 மிதிபடகு, 10 பேர் அமர்ந்து ஒன்றாக செல்லக்கூடிய 6 மோட்டார் படகு ஆகியன உள்ளன. இதில் குழந்தைகளை கவரும் விதமாக மிக்கி மவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகு உள்ளிட்டவையும் அடங்கும். இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சவாரி செய்வார்கள்.

மிதிவண்டி போன்று...

தற்போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு இல்லத்தில் கூடுதலாக ஒரு படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் அமர்ந்து தாங்களாகவே மிதிவண்டியை மிதித்து செல்வது போன்று இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு ஒன்று மட்டுமே தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை பொறுத்தே கூடுதல் படகுகள் படகு இல்லத்துக்கு கொண்டு வரப்படும் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இந்த படகில் சவாரி செய்யும்போது முழங்கால் வலி ஏற்படாமல் இருக்க உயரத்தில் அமர்ந்து மிதிவண்டியை மிதித்து செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் கூட இதை சுலபமாக இயக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர். இந்த ரக படகுகள் வருகையால் சுற்றுலா பயணிகள் இடையே கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


Next Story