ஆவினில் புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம்


ஆவினில் புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம்
x

சேலம் ஆவினில் புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்

புதிய வகை பால் பாக்கெட்

சேலம் ஆவின் நிறுவனம் சார்பில் பால், தயிர், மோர், பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பச்சை நிற பாக்கெட் அரை லிட்டர் எடை கொண்ட பால் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டிலைட் என்ற செறிவூட்டப்பட்ட பால் (வைட்டமின் ஏ மற்றும் டி) 500 மில்லி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், பச்சை நிற த்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட் வயலட் நிறமாக மாற்றம் செய்து விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் உழவர் சந்தைகள் முன்பும், மளிகை கடைகளிலும் நேற்று புதிய வகை ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வாங்கி சென்றனர்.

ரூ.10-க்கு விற்பனை

ஆனால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ரூ.11-க்கு விற்கப்பட்ட 250 மில்லி எடை கொண்ட பாலின் அளவு 50 மி.லி. குறைத்து 200 மில்லி எடை கொண்ட பால் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நுகர்வோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 200 மி.லி பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் எஸ்.கரிசெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆவின் பால் முகவர்கள் கூறுகையில், பச்சை நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் பாலின் நிறம் வேறு கலரில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் புது வகையான பாலா? என்று வாடிக்கையாளர்கள் விளக்கம் கேட்டனர். அவர்களுக்கு புரியும் வகையில் தெரிவித்துள்ளோம். ஆனால் ரூ.11-க்கு விற்கப்பட்ட 250 மில்லி எடை கொண்ட பால் பாக்கெட்டின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 50 மில்லி குறைத்து 200 மில்லி எடை கொண்ட பால் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. மற்றபடி ஒரு லிட்டர் பால் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, என்றனர்.


Next Story