எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம்


எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம்
x

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பால் அட்டை மூலம் நாளொன்றுக்கு சுமார் 4.75 லட்சம் லிட்டர் அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட் பால் மற்றும் நிறை கொழுப்பு பால் ஆகிய வகைகளை பால் அட்டை மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பால் அட்டை மூலம் நாளொன்றுக்கு சுமார் 4.75 லட்சம் லிட்டர் அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.

பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் எளிய நடைமுறையில் காகிதமில்லா பால் அட்டையை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து தரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்யும் போது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அக்குறுஞ்செய்தியை சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போக்களில் காண்பித்து அவர்களுக்கு உண்டான பால் வகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெற்று பயனடையலாம் என்று ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story