பயணச்சீட்டு சோதனை செய்ய கையடக்க கணினி அறிமுகம் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பயணச்சீட்டு சோதனை செய்ய கையடக்க கணினி அறிமுகம் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பயணச்சீட்டு சோதனை செய்ய கையடக்க கணினி அறிமுகம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்களிடம் உள்ள காகிதத்தில் அச்சிடப்பட்ட பட்டியலை பார்த்து பயணிகளின் டிக்கெட்டுகளை சோதனை செய்வார்கள். இந்த முறை தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்கு ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க கணினி (டேப்லட்) வழங்கி வருகிறது.

தெற்கு ரெயில்வேக்கு 857 கையடக்க கணினிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தெற்கு ரெயில்வேயில் இயங்கும் சுமார் 185 ரெயில்களில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி இனி வரும் காலங்களில் மேலும் பல ரெயில்களில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பயண சீட்டுகள் எளிதாக சரிபார்க்கப்பட்டு, டிக்கெட் பரிசோதகர்களின் செயல் திறன் மேம்படும். இது போன்று வெளிப்படை தன்மையுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறை அனைவரும் பயனடையும் வகையில் அமையும்.

1 More update

Next Story