வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு
சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் நேற்று வேளாண்மை கூடுதல் இயக்குனர் கணேசன் திடீரென ஆய்வு செய்தார். பின்னர் அவர் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் குத்தகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அடையாள அட்டையை புதுப்பித்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியனுக்கு கூடுதல் இயக்குனர் கணேசன் அறிவுறுத்தினார். மேலும், மாலை நேர உழவர் சந்தையின் செயல்பாடு குறித்தும், அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் மக்களின் வருகை தொடர்பாகவும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, வேளாண்மை முதுநிலை செயலாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.