மூதாட்டி கொலை வழக்கில் 4 பேரிடம் விசாரணை


மூதாட்டி கொலை வழக்கில் 4 பேரிடம் விசாரணை
x

ஜோலார்பேட்டை அருகே நடந்த மூதாட்டி கொலை தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே நடந்த மூதாட்டி கொலை தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு மனைவி காந்தா (வயது 65). வீட்டில் தனியாக இருந்த காந்தாவை நேற்றுமுன்தினம் மர்ம நபர்கள்கொலை செய்து, அவர் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். உள்ளனர்.

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவு பேரில் துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், சுரேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை என கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.


Next Story