கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த சமூக அமைப்புகளுக்கு அழைப்பு


கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த சமூக அமைப்புகளுக்கு அழைப்பு
x

கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழாவை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நேரு யுவ கேந்திரா சங்கதன் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் "இளைஞர்களின் குரல்- இந்தியா-2047" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினை பெரம்பலூர் நேரு யுவ கேந்திரா, மாவட்டத்தில் செயல்படும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளை நடத்தும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் சமூக அடிப்படையிலான அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரசியல் சார்பற்றவர்களாகவும், கட்சி சார்பற்றவர்களாகவும், முன் அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அமைப்புகளுக்கு எதிராக எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது. நமது மாவட்டத்திற்கு 3 சமூக அடிப்படையிலான அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மாவட்ட நேரு யுவ கேந்திராவில் இருந்து பெறப்படும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 7810982528 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.


Next Story