சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: நள்ளிரவு முதலே காத்திருந்த ரசிகர்கள்...!


சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை:   நள்ளிரவு முதலே காத்திருந்த ரசிகர்கள்...!
x

சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் ரசிகர்கள் டிக்கெட்டை பெற்றுக்கொண்டனர்.

சென்னை,

மே நான்காம் தேதி நடைபெற இருந்த சென்னை - லக்னோ இடையேயான ஐபிஎல் போட்டி, ஒருநாள் முன்னதாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே நான்காம் தேதி லக்னோவில், லக்னோ - சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் அன்றைய தினம் லக்னோ மாநகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஒருநாள் முன்னதாக, மே 3 ஆம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஏப்.21 சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கீழ்தளமான சி.டி.இ கேலரிக்கான ரூ.1500 டிக்கெட்டுகள் 2 கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டது. ரூ.2000, ரூ,2,500 டிக்கெட் கவுண்டர்களிலும், பேடிஎம் இணையதளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.ரூ.3000, ரூ 5,000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்பனை செய்யப்படும். ஒரு நபருக்கு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் டிக்கெட் விற்பனைக்கு, நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்திருந்தனர். காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி இரவு நேரத்தில் கூடிய இளைஞர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.



Next Story