காமராஜர் சாலைக்கு செல்ல வசதியாக இரும்புத்தடுப்புகளை அகற்ற வேண்டும்


காமராஜர் சாலைக்கு செல்ல வசதியாக இரும்புத்தடுப்புகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

லட்சுமி மில் சிக்னலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காமராஜர் சாலைக்கு செல்ல வசதியாக இரும்புத்தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பாப்பநாயக்கன்பாளையம்

லட்சுமி மில் சிக்னலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காமராஜர் சாலைக்கு செல்ல வசதியாக இரும்புத்தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேம்பால பணி

கோவை- அவினாசி சாலை உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10.5 கிலோ மீட்டர் தூரம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் அண்ணாசிலை, ஹோப்காலேஜ், விமான நிலையம், நவஇந்தியா ஆகிய இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்படுகிறது.

இதற்காக மொத்தம் 306 தாங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது அண்ணாசிலை சிக்னல், ஜி.கே.என்.எம். சிக்னல், லட்சுமில்ஸ் சிக்னல் என முக்கிய சிக்னல்களின் நடுவே தாங்கு தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

அண்ணா சிலை சிக்னலின் நடுவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தடுப்பு வைத்து வாகனங்கள் திரும்பி விடப்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் ஜி.கே.எம்.என். சிக்னல் - லட்சுமி மில்ஸ் சிக்னல் இடையே வலது புறமாக திரும்பினால் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் காமராஜர் சாலை உள்ளது. ஆனால் அந்த சாலைக்கு செல்ல முடியாத வகையில் இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் திருச்சி ரோடு சுங்கம், ஒலம்பஸ், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால் ஒரு சில நேரங்க ளில் மட்டும் அந்த தடுப்புகள் நீக்கப்படுகின்றன.

மற்ற நேரங்களில் அந்த சாலைக்கு செல்ல முடியாத வகையில் இரும்புத்தடுப்புகள் வைத்து அடைப்பதால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைகின்ற னர். அவர்கள், லட்சுமி சிக்னல் வரை சென்று திரும்பி வர வேண்டி உள்ளது.

இது குறித்து காமராஜர் சாலை பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல்

கோவை -அவினாசி சாலையில் மேம்பால பணி நடந்து வருகிறது. சிக்னல்கள் இருக்கும் இடத்தின் நடுவே தற்போது தாங்கு தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சிக்னல்களில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது.

வி.ஐ.பி.க்கள் வரும் போது மட்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்ல வசதியாக காமராஜர் சாலைக்கு செல்லும் வகையில் இரும்பு தடுப்பு திறக்கப்படுகிறது. அப்போது அந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த நேரத்தில் லட்சுமி மில்ஸ் சிக்னலில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது.

மற்ற நேரங்களில் காமராஜர் சாலைக்கு செல்ல முடியாத வகையில் தடுப்புகள் உள்ளதால் லட்சுமி மில் சிக்னலில் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே காமராஜர் சாலைக்கு செல்ல வசதியாக இரும்புத்தடுப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story