பொக்லைன் எந்திரம் மோதி இரும்பு வியாபாரி பலி
பொக்லைன் எந்திரம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழந்தார்.
இரும்பு வியாபாரி
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 50), இரும்பு வியாபாரி. இவர் நேற்று இரவு மணப்பாறையில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்காலனி அருகே சென்றபோது பொக்லைன் எந்திரம் மோதி படுகாயம் அடைந்த பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
பெண் சாவு
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், பழனி பாண்டி நகரை சேர்ந்த ஜெயசூர்யா(28), அவரது பெரியம்மாள் தென்றல் ராணி(57) உள்ளிட்டோர் ஒரு காரில் நேற்று இரவு துவரங்குறிச்சியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எளமணம் சீத்தப்படி அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்கு உள்ளானத்தில் தென்றல் ராணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.