சம்பா சாகுபடிக்கு தயாரான நிலையில் பாசன நீர் நிறுத்தம்


சம்பா சாகுபடிக்கு தயாரான நிலையில் பாசன நீர் நிறுத்தம்
x

சம்பா சாகுபடிக்கு தயாரான நிலையில் பாசன நீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். .

புதுக்கோட்டை

கல்லணை கால்வாய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, நெய்வத்தளி, கோயிலூர் உள்பட ஏராளமான கிராமங்களில் கல்லணைக் கால்வாய் தண்ணீர் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாயிலிருந்து நேரடி பாசனம் குறைவாகவும் ஏரி, குளம், கன்மாய்களில் தண்ணீரை சேமித்து வைத்து அதன் மூலமே அதிக பாசனமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு அடுத்த சில நாளில் கல்லணைக் கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தது. சுமார் 25 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வந்ததால் ஏரி, கண்மாய்களில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியுள்ளது.

நிறுத்தப்பட்ட தண்ணீர்

புதுக்கோட்டை மாவட்டத்திலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குறுவை சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்துள்ளது. அதனால் தண்ணீர் வரும் போது ஏரி, கண்மாய்களில் சேமித்து வைத்து சம்பா பருவத்தில் நடவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக சம்பா சாகுபடி செய்யாத புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளுக்கு கல்லணைக் கால்வாய் மூலம் வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தயாரான நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story