இருக்கன்குடி மாரியம்மன் கோவில் விரிவாக்க பணி


இருக்கன்குடி மாரியம்மன் கோவில் விரிவாக்க பணி
x

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விரிவாக்க பணிக்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர்

சாத்தூர்,

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விரிவாக்க பணிக்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆற்றில் மேம்பாலம்

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணி நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு செல்லும் வழியில் அர்ச்சுனா நதியை கடக்க வேண்டி இருப்பதாலும், மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாலும் ஆற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவில் நிதியில் ரூ.50 கோடி செலவு செய்து கொள்ள இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

அதன்பேரில் கோவில் பகுதியில் ஆற்றுப்பாலம், அன்னதானக்கூடம், ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், பக்தர்களுக்கு மருத்துவ மையம் மற்றும் வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு வகையான பணிகளை செய்வதற்கான ஆய்வு பணியினை இந்து சமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் அமுதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது கோவில் உதவி ஆணையாளர் கருணாகரன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story