பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா


பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா
x

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று தண்ணீர் தொட்டிகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீரென சோதனை செய்தனர்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று தண்ணீர் தொட்டிகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீரென சோதனை செய்தனர்.

குடிநீர் தொட்டிகள்

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், எஸ்.குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிபட்டி, பாப்பம் பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள், 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.

இந்நிலையில்,குடிநீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா?.

தொட்டிகளில் சரியான அளவு பிளிச்சீங் பவுடர், குளோரின் மாத்திரைகள் போடப்பட்டு உள்ளதா? என, சுல்தான்பேட்டை வட்டார சுகாதார ஆய்வாளர்களான ரவிச்சந்திரன், கார்த்திக்குமார், அப்துல் நசீர், சந்தோஷ்குமார் ஆகியோர் அந்தந்த ஊராட்சி செயலாளர்களுடன் சென்று திடீரென சோதனை செய்தனர்.

சிக்கனம்

அப்போது, சுகாதார ஆய்வாளர்கள் குடிநீர் தொட்டி பராமரிப் பாளர்களிடம் கூறுகையில், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகளை மிகவும் சுத்தமாக கழுவி பராமரிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் வராமல் இருக்க தண்ணீரில் குளோரினேஷன் செய்ய வேண்டும். தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story