கோவை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி 90 நாட்களுக்குள் பொருத்தப்பட்டதா?


கோவை அரசு ஆஸ்பத்திரியில்  எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி 90 நாட்களுக்குள் பொருத்தப்பட்டதா?
x
தினத்தந்தி 15 Jun 2023 12:30 AM IST (Updated: 15 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி 90 நாட்களுக்குள் பொருத்தப்பட்டதா? என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்தது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி 90 நாட்களுக்குள் பொருத்தப்பட்டதா? என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்தது.

அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு எம்.ஆர்.ஐ.கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி 90 நாட்களுக்குள் பொருத்தப்படவில்லை என்ற பரிந்துரை எங்களுக்கு வந்தது. அதன் தொடர்பாக இங்கே ஆய்வு மேற்கொள்ள வந்தோம். இங்கு ஆய்வு மேற்கொண்டதில் அது 90 நாட்களுக்குள் பொருத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு செப்பனிடும் பணிகள், பராமரிப்புக்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதற்கு கேட்கப்படும், போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்கி வழங்க வேண்டும். மேலும் இந்த ஆஸ்பத்திரியை மேலும் தரம் உயர்த்த பரிந்துரை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

இதைத் தொடர்ந்து உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணிகள், மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி, மகாளிப்பாறை பழங்குடியினர் பகுதிகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சிகளில் குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈஸ்வரன், சரஸ்வதி, நத்தம் விஸ்வநாதன், மதியழகன், அம்மன் கே.அர்ச்சுனன், மார்க்கண்டேயன், சட்டப்பேரவை இணைச்செயலாளர் தேன்மொழி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இருந்தனர்.

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

1 More update

Next Story