இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகூரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
நாகூர்:
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகூர் தர்கா அலங்கார வாசலில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பேரியக்க நாகூர் நகர பொறுப்பாளர் அப்துல் ஹமீது சாஹிப் தலைமை தாங்கினார். முஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகபர் சாதிக் சாஹிப், சாதம் மவுலானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஹாஜா மெய்தீன் பேசினார். இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் சாஹிப் நன்றி கூறினார்
Related Tags :
Next Story