ஓட்டப்பிடாரம் ஜமாபந்தியில் 31 பேருக்கு பட்டா வழங்கல்
ஓட்டப்பிடாரம் ஜமாபந்தியில் 31 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை உதவி கலெக்டர் வழங்கினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று வரை ஜமாபந்தி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட உதவி கலெக்டர் ஜேன்கிறிஸ்டிபாய் தலைமையில் நடந்தது. இதில் 871 பேர் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில் உடனடியாக 104 ஏற்கப்பட்டு, 132 மனுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 635 மனுக்கள் நிலுவையில் உள்ளன. உடனடியாக ஏற்கப்பட்ட மனுக்களில் நேற்று மாலை 51 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 31 பேருக்கு பட்டா மாறுதலையும் உதவிகலெக்டர் வழங்கினார்.
அப்போது ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார்கள் ஆனந்த், வடிவேல் குமார், அன்னாதாஸ், தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் திருமணி ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலர் அறிவழகன் உட்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.