ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை


ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை
x

நாங்குநேரி அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம் கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது 22). இவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சுரேசுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

கடந்த 6-ந் தேதி இரவில் வீட்டில் வைத்து சுரேஷ் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story