ஐ.டி.நிறுவன பெண் ஆன்லைனில் வாங்கிய ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை
கோபி அருகே பாட்டியை பார்க்க வந்த சென்னை ஐ.டி.நிறுவன பெண், ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடசாமி இவருடைய மகள் இந்துமதி வயது 25 பி இ. படித்து முடித்துள்ளார் .இந்துமதிக்கும் கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு சாரதி வயது 24 என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து மதியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை இதை யொட்டிஅவரை பார்த்து உடல்நலம் விசாரிப்பதற்காக பொலவ காளி பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு இந்துமதி வந்தார்.
இந்த நிலையில் 17ஆம் தேதி மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்குவதற்காக உள்ளே சென்றார். மாலை 7 மணி வரை திறக்கப்படவில்லை சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள்கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்த பொழுது இந்துமதி முகத்தில் பாலிதீன் கவரைபோட்டு முகத்தில் கட்டிக் கொண்டும் பலூனில் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் கேஸ் டியூப் வழியாக வாயில் வைத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.ஆன் லைனில் ஹீலியம் வாயு வாங்கி உள்ளார்.
தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி,இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்து இந்து மதியின் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி மூன்று மாதங்கள் ஆனதால் கோபி ஆர்.டி.ஓ.திவ்ய பிரியதர்ஷினி இது பற்றி விசாரணை செய்தார். இந்துமதியின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. ஆர்.டி.ஓ விசாரணைக்கு பின்பே தற்கொலைக்கு காரணம் குறித்துதகவல்கள் வெளிவரும். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.