மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி நிறுவன ஊழியர் கைது


மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி நிறுவன ஊழியர் கைது
x

மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தென்னிலை அருகே உள்ள காட்டு பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 30). இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசு மற்றும் அவரது தாயார் மணிமேகலை, உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிந்து, திருநாவுக்கரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story