ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி


ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 May 2023 12:45 AM IST (Updated: 27 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோயம்புத்தூர்

கோவை

ஆன்லைனில் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி கோவை ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் ஐ.டி. ஊழியர்

கோவை கணபதி அருகே உள்ள லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புவனேஸ்வரி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் என்ற செயலியின் குழுவில் இணைந்தார்.

பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். மேலும் அவர் பிட்காயின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார்.

ரூ.9 லட்சம் மோசடி

இதனை உண்மை என்று நம்பிய புவனேஸ்வரி முதற்கட்டமாக போனில் பேசிய ஆசாமி கூறிய வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவருக்கு லாபமாக ரூ.2,800 கிடைத்தது. மேலும் ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பிய பணிகளை செய்து கொடுத்தார்.

தொடர்ந்து அந்த ஆசாமி கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ரூ.8 லட்சத்து 97 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த ஆசாமி கூறியபடி லாபத் தொகை கிடைக்கவில்லை. அந்த மர்ம ஆசாமியை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என்று வந்தது. இதனால் மர்ம ஆசாமி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story