போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்களுக்கு தீர்வு

போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்களுக்கு தீர்வு
x

மதுரையில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. மேலும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

மதுரை

மதுரையில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. மேலும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் முகாம்

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடந்து வருகிறது. ஆனால் தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்வு காண அனைத்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மெகா பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று காலை நடந்தது.

இதில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர், அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என அனைவரும் பங்கேற்றனர். முகாமில் மொத்தம் 328 மனுக்கள் பெறப்பட்டன. அதில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை, குடும்ப பிரச்சினை, வாய்தகராறு புகார் மற்றும் பலதரப்பட்ட புகார் மனுக்களில் 223 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. முகாமில் நேரடியாக 31 பேர் வந்து புகார் மனுக்களை கமிஷனரிடம் வழங்கினர்.

போலீஸ் கமிஷனர் உத்தரவு

அதில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தீர்க்கப்படாத 61 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உதவி கமிஷனர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். போலீசார் நடத்தும் குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது என தெரிவித்தனர்.

Next Story