வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு


வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு
x

பல்லுயிர் பெருக்க பூங்காவாக மாற்றும் வகையில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்

கோயம்புத்தூர்

கோவை

பல்லுயிர் பெருக்க பூங்காவாக மாற்றும் வகையில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தினமும் 1000 டன் னுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை, வெள்ள லூர் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. அவை மலை போல் தேங்கி இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே அங்கு தேங்கி இருக்கும் குப்பைகளை நவீன முறையில் அழிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குப்பைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

17 ஆயிரம் மரக்கன்றுகள்

60 ஏக்கர் பரப்பளவில் உள்ள வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 10 லட்சம் டன் குப்பைகள் தேங்கி உள்ளன. அதை பயோ மைனிங் முறையில் அழிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது வரை 20 ஏக்கரில் குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படுகிறது. அதில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவை வளர்ந்து மரங்களாகினால் குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை.

மேலும் மியாவாக்கி முறையில் ஒரே இடத்தில் அதிக மரக்கன்றுகள் நடும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. அங்கு ஏராளமான பல்லுயிர்களும் வாழ வாய்ப்பு உருவாகும். மேலும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story