தக்காளியை சாலையோரம் கொட்டும் அவலம்


தக்காளியை சாலையோரம் கொட்டும் அவலம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடும் விலை வீழ்ச்சி காரணமாக கோவையில் சாலையோரத்தில் தக்காளியை கொட்டும் அவல நிலை இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கடும் விலை வீழ்ச்சி காரணமாக கோவையில் சாலையோரத்தில் தக்காளியை கொட்டும் அவல நிலை இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

காய்கறி மண்டிகள்

மதுக்கரை ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சியில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகின்றன. இங்கு 50-க்கும் மேற் பட்ட கடைகள் உள்ளன.

அந்த கடைகளுக்கு வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநா யக்கனூர், திருமலையம்பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசி பாளையம், பாலத்துறை, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காய்கறி மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் தக்காளிகளுக்கு விலை இல்லாத நிலை உள்ளது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்்த தக்காளிகளை சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்லும் அவல நிலை உள்ளது.

நாச்சிபாளையம் மண்டியில் நேற்று 16 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.70 விற்பனையானது. மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கும் குறைவாக விற்பனை ஆனது. ஆனால் சில்லறை கடைகளில் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நஷ்டம்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்றது. தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. இதனால் தோட்டத் தில் தக்காளியை பறித்து ஏற்றி இறக்கி மண்டிகளுக்கு கொண்டு சென்றாலும் நஷ்டமே ஏற்படும்.

மேலும் அந்த தக்காளிகளை கொண்டு வந்த குறைந்த விலைக்கு விற்றால் தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் கமிஷன் ஆகியவை கொடுக்க கூட கட்டுபடியாகாது. எனவே தக்காளிகளை சாலையோரத்தில் கொட்டி செல்கிறோம்.

இ்வ்வாறு அவர்கள் கூறினர்.

குளிர்பதன கிடங்கு

நாச்சிபாளையம் பகுதியில் சாலையோரத்தில் பெட்டி பெட்டி யாக கொண்டு வந்து தக்காளிகளை கொட்டி செல்வது வேதனை அளிக்கிறது. எனவே தக்காளியை சேமித்து வைக்க வசதியாக குளிர்பதன கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story