சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மீன் பிடிக்கும் நூதன போராட்டம்


சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மீன் பிடிக்கும் நூதன போராட்டம்
x

பொதக்குடியில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீன்பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

பொதக்குடியில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீன்பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் தேங்கும் மழைநீர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் உள்ள ஒரு சில தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.

இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதை சரி செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீன்பிடிக்கும் நூதன போராட்டம்

இந்த நிலையில் பொதக்குடியில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மீன்பிடிக்கும் நூதன போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிஜெகபர்சாதிக் தலைமை தாங்கினார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் வலைவிரித்து மீன்பிடித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சாலையை சீரமைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story