கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை பேசாமல் இருப்பது நல்லது


கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை பேசாமல் இருப்பது நல்லது
x
தினத்தந்தி 5 Aug 2023 1:45 AM IST (Updated: 5 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.-அ.தி.மு.க கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை பேசாமல் இருப்பது நல்லது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை


பா.ஜ.க.-அ.தி.மு.க கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை பேசாமல் இருப்பது நல்லது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.


பூமி பூஜை


கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் ரூ.19½ லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.


இதில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


வீடியோ பதிவு


என் மண், என் மக்கள் யாத்திரைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்களின் கருத்துகளை, குறைகளை கேட்டறிய நல்ல வாய்ப்பாக இந்த யாத்திரை அமைந்து உள்ளது. இளைஞர்கள் அதிகமாக இதில் கலந்து கொண்டு வருவது உற்சாகம் அளிக்கிறது.


யாத்திரையில் பங்கேற்று உள்ள மகளிர் அணியை சேர்ந்தவர்களை மிக மோசமாக சித்தரித்து வீடியோ பதிவிட்டு உள்ளனர். இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் அளிக்க உள்ளோம்


பா.ஜனதா மாநில தலைவருக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை தருவது இல்லை. மாநில தலைவர் என்கிற முறையில் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை பேசாமல் இருப்பது நல்லது.


ஒத்துழைப்பு தரவேண்டும்


என்.எல்.சி. விரிவாக்கம் தொடர்பாக கோர்ட்டு உத்தரவிற்கு விவசாயிகளும், என்.எல்.சி. நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


பின்னர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்கள் கைத்தறி ஆடை அணிந்தவாறு பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Next Story