மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வேப்பந்தட்டையில் இன்றும், வேப்பூரில் நாளையும் நடக்கிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று (வியாழக்கிழமை) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நாளை (வெள்ளிக்கிழமை) வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள், விதவைகள் போன்ற பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன் பயிற்சி, வங்கிக்கடன், வீட்டு திட்ட வீடுகள் போன்றவை முகாமில் பட்டியலிடப்பட்டுள்ளன. இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தெரிவித்துள்ளார்.


Next Story