"ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது" - அமைச்சர் ரகுபதி
ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை,
17 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- "ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. சிறைத்துறை விதிப்படி ஒரு நாளுக்கு 3 பேர் மட்டும் தான் மனு அளித்து சந்திக்க முடியும். செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்" என்று கூறினார்.
Related Tags :
Next Story