மாதவிடாய் காலத்தில் தன் சுத்தம் பேண வேண்டியது அவசியம்
மாதவிடாய் காலத்தில் தன் சுத்தம் பேண வேண்டியது அவசியம் என்று வால்பாறை அரசு கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மாணவிகளுக்கு, டாக்டர் குழுவினர் அறிவுரை வழங்கினர்.
வால்பாறை
மாதவிடாய் காலத்தில் தன் சுத்தம் பேண வேண்டியது அவசியம் என்று வால்பாறை அரசு கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மாணவிகளுக்கு, டாக்டர் குழுவினர் அறிவுரை வழங்கினர்.
அரசு கல்லூரியில் கருத்தரங்கு
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்களின் மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய தன்சுத்த சுகாதார முறைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள ஒரு தனியார் பல்நோக்கு ஆஸ்பத்திரியின் சிறப்பு மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள் குறித்து விளக்கினார்கள். மேலும் மாதவிடாய் ஏற்படுவதன் அவசியம், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
கருத்தரங்கில் டாக்டர்கள் அபர்னவி, ஜீவிதன், மோகன்குமார் அடங்கிய குழுவினர் பேசும்போது கூறியதாவது:-
மாதவிடாய் ஏற்படுவதை பிரச்சினையாகவோ, தீட்டாகவோ கருதக்கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் சீராக தவறாமல் மாதவிடாய் ஏற்பட்டால் அந்த பெண்ணின் உடல் நலம் சரியாக உள்ளது என்று அர்த்தம்.
தூய்மையாக இருக்க வேண்டும்
அந்த சமயத்தில் தன் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணிக்காப்பது அவசியம். இதில் கவனம் செலுத்த தவறி விட்டால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாதந்தோறும் ஏற்படும் இந்த நிகழ்வின் சமயத்தில் ஓய்வெடுக்க வேண்டும். நீண்ட பயணங்களை தவிர்க்க வேண்டும். சத்தாண உணவுகளை சாப்பிட வேண்டும். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உடலை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வால்பாறை பகுதியில் முதன்முதலாக நடத்தப்பட்ட இதுபோன்ற கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.