கவர்னர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல" - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்


கவர்னர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்
x

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மாநில அரசுகள் கவர்னர்களை குறைத்து மதிப்பிடுவது நல்லது அல்ல என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் 132 பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், கல்வி, சமூகம் ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்கியவர் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார்.

மேலும் ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல எனவும் தமிழிசை தெரிவித்தார்.


Next Story