தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகையை 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்...!


தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகையை 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்...!
x

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகையை 4 லட்சம் பேர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது.


Next Story