ரசிகர்களுடன் நடிகர் விஜய் நாளை சந்திப்பு என தகவல்...!
விஜய் மக்கள் இயக்கத்தின் 3 மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகளை நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தளபதி விஜய் அழைப்பு விடுத்துள்ளார். வாரிசு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள,வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா வேண்டாமா என எழுந்துள்ள சர்ச்சையை பற்றி பேச விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நடிகர் விஜய் வர உள்ளதாகவும் தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் அக்கூட்டத்திற்கு பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story