ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழக்கும் ஐ.டி. ஊழியர்கள்
ஆன்லைன் மோசடியில் ஐ.டி. ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் பணத்தை இழப்பதாகவும், மோசடி செய்யப்பட்ட ரூ.6 கோடி முடக் கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறினார்.
ஆன்லைன் மோசடியில் ஐ.டி. ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் பணத்தை இழப்பதாகவும், மோசடி செய்யப்பட்ட ரூ.6 கோடி முடக் கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறினார்.
168 செல்போன் ஒப்படைப்பு
கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் தொலைந்து போன 168 செல்போன் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.30 லட்சம். அதை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் செல்போன் களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுவரை மொத்தம் 1,162 பேர் தொலைத்த செல்போன்கள் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 2 லட்சம் ஆகும். கோவை மாவட்டத்தில் இதுவரை 22 கொலை நடைபெற்று உள்ளது. அதில் தொடர்புடைய 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் கொலை நடைபெற்றுள்ளது.
பாலியல் குற்றங்கள்
285 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யயப்பட்டு 335 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 503 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.54 லட்சம். ரூ.32 லட்சம் மதிப்புள்ள போதை மருந்துகள் மற்றும் கஞ்சா சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட் டன. 173 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 1,934 குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
247 திருட்டு வழக்குகளில் 285 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.1 கோடியே 80 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்புள்ள திருட்டு பொருட்கள் மீட்கப்பட்டது. அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. குழந்தைகளுக்கு எதிரான 84 பாலியல் வழக்குகளில் 88 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 78 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 7 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம்
3,413 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,448 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 5,392 லிட்டர் மதுபானம், 6 ஆயிரம் லிட்டர் சாராயம், 30 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 197 பேர் கைது செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 400 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 630 பறிமுதல் செய்யப் பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 594 பேர் கைது செய்யப்பட்டு ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 20 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காவல்துறை மூலம் பொதுமக்களிடம் 1,743 மனுக்கள் பெறப்பட்டு 1,571 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பள்ளி கல்லூரிகள் அருகில் அங்கீகாரம் இல்லாத 276 கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் குற்றங்கள்
கோவை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்ததாக 1,500 புகார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலும் ஐ.டி.ஊழியர்கள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து 1930 எண்ணில் புகார் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.6 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்க வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த முதியவர்
கோவை வடவள்ளியை சேர்ந்த ஜெகதீஷ் (வயது75) என்பவரின் செல்போன் 6 மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது. அது மீட்கப் பட்டது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று தனது செல்போனை பெற ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் முககவசம் அணிந்த படி மாவட்டபோலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவரி டம் உடனடியாக செல்போன் வழங்கப்பட்டது. மேலும் உடல்நலக் குறைவு குறித்து முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் வீட்டிலேயே வந்து செல்போனை ஒப்படைத்து இருப்போம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு ஜெகதீஷ் நன்றி கூறினார்.