ஐ.டி. பெண் ஊழியரை பலாத்காரம் செய்து கருவை கலைக்கச் சொல்லி மிரட்டல்
துடியலூர் அருகே ஐ.டி. பெண் ஊழியரை பாலியல் பலாத்கா ரம் செய்து கருவை கலைக்க சொல்லி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஐ.டி.பெண் ஊழியர்
கோவையை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் அவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் சென்று காதலை வளர்த்து வந்தோம்.
கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி என்னை தொடர்பு கொண்ட சக்தி தங்கவேல் தனக்கு காய்ச்சல் அடிப்பதாகவும், உதவி செய்ய வருமாறும் அழைத்தார்.
பாலியல் பலாத்காரம்
அதை நம்பி நான் அவருடைய வீட்டுக்கு சென்றேன். அங்கு அவர் தனியாக இருந்தார். அதை சாதகமாக பயன்படுத்திய சக்தி தங்கவேல் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதைத்தொடர்ந்து அவர் என்னை பலாத்காரம் செய்ததால் நான் 2 மாத கர்ப்பமானேன். இது குறித்து நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் கருவை கலைத்து விடுஎன்றார். மேலும் கருவை கலைக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
ைகது
மேலும் அவர் என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து விட்டார். எனவே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சக்தி தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திதங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.