ஐ.டி. ஊழியர் வீட்டில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு


ஐ.டி. ஊழியர் வீட்டில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐ.டி. ஊழியர் வீட்டில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

கோயம்புத்தூர்

கோவை

கோவை ராமநாதபுரம் ராமலிங்க ஜோதிநகரை சேர்ந்தவர் டோமினிக் இன்பன்ட்ராஜ் (வயது 25). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர், அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டை பூட்டி விட்டு இரவு பணிக்கு சென்றார். அவர், காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்-டாப், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மர்ம நபர் திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், டோமினிக் இன்பன்ட்ராஜ் வீட்டில் இருந்த பொருட்களை ஒருவர் தூக்கி ஆட்டோவில் ஏறி தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Next Story