அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தாமதமான நடவடிக்கை என்றபோதும், நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளும், நன்றியும்.
சட்டவரைவினை நிறைவேற்றியதோடு நின்றுவிடாமல், முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்ந்தறிந்து, நடைமுறையில் சாத்தியப்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story