கார்களில் அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கா் ஒட்டியது அம்பலம்


கார்களில் அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கா் ஒட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 6 Feb 2023 1:15 AM IST (Updated: 6 Feb 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்தவர்கள் கார்களில் அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கர் ஓட்டி வலம் வந்தது விசாரணையில் அம்பலமானது.

கோயம்புத்தூர்

இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்தவர்கள் கார்களில் அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கர் ஓட்டி வலம் வந்தது விசாரணையில் அம்பலமானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோடிக்கணக்கில் மோசடி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் என்பவர் தனது மகளுக்கு வேலை தேடி வந்தார்.

அவருக்கு திண்டுக்கலை சேர்ந்த ஜி.சரவணக்குமார், ஈரோடு பவானிசாகரை சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி கம்பத்தை சேர்ந்த அன்புபிரசாத் (39), தர்மபுரி நிர்மலா நகரை சேர்ந்த என்.எஸ்.சரவணக்குமார் (33), கடலூர் பண்ருட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (33), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுதாகர் (37), சுரேந்திரன் (34) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

அவர்கள் தங்களை முதல்-அமைச்சர் அலுவலக உயர் அதிகாரி கள், அதிகாரிகளின் டிரைவர்கள் என்று கூறி உங்கள் மகளுக்கு வேலை வாங்கி தருகிறோம். அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதை நம்பி சந்தானகிருஷ்ணன் பல தவணைகளாக ரூ.21 லட்சம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் போலியாக பணி நியமன ஆணை தயாரித்து சந்தான கிருஷ்ணனிடம் வழங்கி மோசடி செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது.

6 பேர் சிக்கினர்

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஜவகர் பிரசாத், அன்புபிரசாத், என்.எஸ்.சரவணக்குமார், சதீஷ்குமார், சுதாகர், சுரேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் சுதாகர், சுரேந்திரன் ஆகியோர் அண்ணன் தம்பிகள் ஆவர். ஜி.சரவணக்குமார் தலைமறைவாகி விட்டார்.

கைதானவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

மோசடியில் ஈடுபட்ட 7 பேரும் கோவையில் உள்ள மில்லில் தொழிலாளர்களாக வேலை பார்த்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாத தால் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ விரும்பினர்.

போலி ஸ்டிக்கர்

இதற்காக அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்கு தலைவனாக ஜி.சரவணக்குமார் செயல்பட்டுள்ளார். அதன்பிறகு அவர்கள் மில் வேலையை விட்டனர்.

இதை அவர்கள் தங்களை அரசு உயர் அதிகாரிகள் என்று கூறினர்.

அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அரசு வாக னம் என்று போலி ஸ்டிக்கர் ஓட்டிய வாகனங்களில் வலம் வந்த னர். மேலும் பணம் கொடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங் குவதற்காக, அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கர் ஓட்டிய வாகனத்தில் கோவில்களுக்கு அழைத்து சென்று உள்ளனர்.

சொகுசு வாழ்க்கை

அங்கு தங்களிடம் பணம் கொடுத்தவர்களுக்கு மாலை அணி வித்து பரி வட்டம் கட்டி மரியாதை செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர். இதனால் பணம் கொடுத்தவர்கள் அவர்களை உண்மையிலேயே அரசு உயர் அதிகாரிகள் என்று நம்பி உள்ளனர்.

அதன்பிறகு தங்களுக்கு அறிமுகம் ஆனவர்களிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று உள்ளனர். இது போல் பலரும் அவர்கள் பணம் வாங்கி மோசடி செய்து உள்ளனர். பின்னர் அவர்கள் மோசடி செய்த பணத்தில் சொகுசாக வாழ்ந்து உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


Next Story