கோவில்பட்டியில்பதுக்கி வைக்கப்பட்டு இருந்த1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:2 பேர் சிக்கினர்


கோவில்பட்டியில்பதுக்கி வைக்கப்பட்டு இருந்த1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில்பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தநர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்ற கோவில்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது, கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் அருகே 2 பேர் சில மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தனர்.

பறிமுதல்

உடனடியாக போலீசார் அங்கு சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துராஜ் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த மாரியா மகன் விஜயன் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கோழித்தீவனத்துக்காக வேறு மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முத்துராஜ், விஜயன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story