எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கியதே பாஜக தான் - நயினார் நாகேந்திரன்


எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கியதே  பாஜக தான் -  நயினார் நாகேந்திரன்
x

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே பாஜக தான் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூரில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,

அதிமுகவில் ஒவ்வொரு தலைவர்களின் மறைவுக்கு பின்னரும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது வழக்கம் தான். அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே பாஜக தான் என தெரிவித்துள்ளார்.


Next Story