சென்னையில் நடைபெறும் தேசிய ஆக்கி போட்டியை மின்னணு திரையில் காண ஏற்பாடு


சென்னையில் நடைபெறும் தேசிய ஆக்கி போட்டியை மின்னணு திரையில் காண ஏற்பாடு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெறும் தேசிய ஆக்கி போட்டியை மின்னணு திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் 7-வது ஆடவர் ஆக்கி போட்டிகள் நேற்று சென்னையில் மாலை 4 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டிகளை பொதுமக்கள் நேரலைகளில் காண்பதற்கு ஏதுவாக, சிவகங்கை பஸ் நிலையத்தில் மின்னணு திரை வாயிலாக காண்பிப்பதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

ஆக்கி போட்டிகள் முடிவடையும் வரை இந்த மின்னணு திரையில் ஆக்கி விளையாட்டு போட்டிகளை காணலாம்.

1 More update

Next Story