உடன்குடியில் மக்கள் நலன்காக்கும் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உடன்குடியில் மக்கள் நலன்காக்கும் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் மக்கள் நலன்காக்கும் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பில் உடன்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தையடித் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதி, நகர பொறுப்பாளர் ராமசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஆரோக்கியசாமி, மாநில துணைத்தலைவர் மனோகரன், மாநில பொதுச்செயலர் முகைதீன், மாநில குழு உறுப்பினர்கள் தவமணிசெல்வி, மகாரணி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story