ஐ.டி.ஐ. மாணவர் ஏரியில் மூழ்கி பலி


ஐ.டி.ஐ. மாணவர் ஏரியில் மூழ்கி பலி
x

கருமந்துறையில் ஐ.டி.ஐ. மாணவர் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:-

கருமந்துறையில் ஐ.டி.ஐ. மாணவர் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.டி.ஐ. மாணவர்

சேலம் மாவட்டம் கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்காக அரசு தொழிற்பயிற்சி நிைலயம் (ஐ.டி.ஐ.) உள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியை சேர்ந்த வேடன் என்பவரின் மகன் பிரவீன்குமார்(வயது 18) படித்து வந்தார். இவர் பயிற்சி நிலையம் அருகே உள்ள அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்று காலை 7 மணியளவில் மாணவர் பிரவீன் குமார், விடுதியில் தங்கி உள்ள நண்பர்களுடன் அரசு பயிற்சி நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பெருஞ்சூர் ஏரியில் குளிக்க சென்றார்.

அப்போது மாணவர் பிரவீன் குமார் ஏரியில் உள்ள நீரின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கி புதைமணலில் சிக்கிக்கொண்டு காப்பாற்றுமாறு கையை உயர்த்தி உள்ளார். ஆனால் அவர் விளையாட்டாக கையை காட்டுவதாக நினைத்துள்ளனர். ஆனால் மாணவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், கருமந்துறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய மாணவரின் உடலை மீட்டனர். மேலும் கருமந்துறை போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்து கருமந்துறைக்கு வந்த பிரவீன் குமாரின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவரின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் உறுதி அளித்தனர். அதன்பிறகு மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் போது எவ்வாறு விடுதியை விட்டு வெளியே வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story