"ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல" - சிரித்துக்கொண்டே கேட்ட ஓபிஎஸ்


ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல - சிரித்துக்கொண்டே கேட்ட ஓபிஎஸ்
x

சென்னை,

சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. 2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் தொடங்கிய பின் இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும். எனவும் தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Next Story