மெதூர் ஊராட்சியில் இவலச கண் சிகிச்சை முகாம்
மெதூர் ஊராட்சியில் இவலச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர்
மீஞ்சூர் அடுத்த மெதூரில் ஊராட்சி மன்ற சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் லிங்கேஸ்வரர் முன்னிலை வகித்தார். கண் சிகிச்சை நோயாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கண்பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் தனியார் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் கண்பார்வை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story