சுற்றுலா பயணிகளை வரவேற்கும் ஜகரண்டா மலர்கள்


சுற்றுலா பயணிகளை வரவேற்கும் ஜகரண்டா மலர்கள்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் ஜகரண்டா மலர்கள்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய காலம் ஆகும். அதன்படி தற்போது இருந்தே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கிவிட்டனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்திலும், கோடைக்காலம் தொடங்கவுள்ளதை அறிவிக்கும் வகையிலும் வெளிநாட்டு வகை மலரான ஜகரண்டா மலர்கள் வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும், வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையோரத்திலும், வனப்பகுதிக்குள்ளும் நீல நிறத்தில் பூத்துக்குலுங்கி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


Next Story