விற்பனைக்காக குவிக்கப்பட்ட பலாப்பழங்கள்


விற்பனைக்காக குவிக்கப்பட்ட பலாப்பழங்கள்
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விற்பனைக்காக பலாப்பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்

தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சரக்கு வாகனம் மூலம் ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களில் பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து பலாப்பழ வியாபாரி பாலா கூறும்போது, பலாப்பழ சீசன் தற்போதுதான் தொடங்கியுள்ளது.

ஒரு கிலோ பலாப்பழம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சீசன் உள்ளதால் நாட்கள் செல்ல செல்ல இதைவிட பலாப்பழத்தின் விலை குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.

1 More update

Next Story