விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்
விற்பனைக்காக பலாப்பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன பலாப்பழங்கள்தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் டீ, காபி உள்ளிட்ட சூடான பானங்களை தவிர்த்து தர்ப்பூசணி, பழ ஜூஸ் மற்றும் பழவகைகள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களிலும் பலாப்பழம் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலெக்டர் அலுவலகம் அருகே, பழைய பஸ் நிலையம், அரண்மனை உள்ளிட்ட பல இடங்களில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பலாப்பழங்கள் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
Related Tags :
Next Story