ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பீட்டர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் அந்தோணிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் முருகையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.






