வெல்லம் விலை வீழ்ச்சி


வெல்லம் விலை வீழ்ச்சி
x

வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக புகழூர் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி சூடேற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,275 வரையிலும், அச்சு வெல்லம் ஒருசிப்பம் ரூ.1,330 வரையிலும் வாங்கிச் சென்றனர். இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,240 வரையிலும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் 1,270 வரையிலும் வாங்கிச் சென்றனர். வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

1 More update

Next Story