உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு
உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். வெல்லம் தயாரிப்பு ஆலை அதிபர்கள் வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர்.பின்னர் வெல்லங்களை நன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய வெல்லம் சிப்பங்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். உற்பத்தி குறைவால் நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,190க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ2,100 வரை விற்பனையாகிறது.